About us

 

oil supplier in trichy
மரச்செக்கு எண்ணெயா... அப்படின்னா என்ன?

எள் அல்லது தேங்காயயை பெரிய கல் உரலில் வாகை மரத்தால் ஆன செக்கை பூட்டி, மாடு கொண்டு சுழற்றி சுழற்றி அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள். கால மாற்றத்துக்கு ஏற்ப, தற்போது செக்கை மின்சார உதவியோடு இயக்குகிறார்கள். தற்போது மரச்செக்கு எண்ணெய் மீதான நம்பிக்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை தினசரி சமையலுக்கு உகந்தவை. மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால். அதன் ருசி காலகாலத்துக்கும் மறக்காது.